Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் தன் பாய் ப்ரெண்டுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்ட ஸ்ருதிஹாசன்

உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் கோலிவுட் , பாலிவுட், டோலிவுட் என மூன்று சினிமாவில் பிஸியாக நடிப்பு, பாடல்கள் என இருப்பவர்.
முதலில் தந்தை கமல்ஹாசனுக்கு தன் காதலர் மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, பின்னர் சில தினங்களுக்கு முன்பு தாய் சரிகாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற மறைந்த கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணாதாசன் – வினோதினி திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார்.
புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். விரைவில் இவர் கல்யாண அறிவிப்பை பலரும் எதிர் பார்த்து வந்த நிலையில் மைக்கேல் என் நண்பர். இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால், நான் இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன். திருமணம் நிச்சயமானால் உடனே அறிவிப்பேன் எனத் தெரிவித்தார்.
சிலர் பிரேக் அப் என்றனர், வேறு சிலரோ தாய் சரிகா சம்மதிக்கவில்லை என்றனர். எனினும் சுருதி எதுவும் சொல்லவில்லை.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புதிய போட்டோ உப்லோஅது செய்துள்ளார் ஸ்ருதி.
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நாளுமே சூப்பர் அனுபவம் தான். சிறந்த நண்பன் பார்ட்னர் ஆனால் எப்படி இருக்கும் என்று காட்டிவிட்டாய். ஒன்றாக நடந்து , பேசி , சிரித்துக்கொண்டே இருக்கிறான் உன்னுடன் என்று கூறியுள்ளார்.
சினிமாபேட்டை குசும்பு
ஸ்ருதி நீங்களாவது கல்யாண சாப்பாடு போடுங்க அப்படியே லிவிங் டுகதர் முறையிலேயே இருந்து விடாதீங்க…
