Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மைக்கேல் கார்சலுடன் காதலா? மனம் திறக்கும் ஸ்ருதிஹாசன்.!

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தனது காதல் குறித்து முதல்முறையாக மனம் திறந்து இருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக தமிழில் சிங்கம் மூன்றாம் பாகத்தில் நடித்து இருந்தார்.

சினிமாவிற்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டதால் ஒரு சின்ன மாறுதலுக்காக இடைவெளி எடுத்த ஸ்ருதி மீண்டும் நடிக்க கதை விவாதத்தில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இடைப்பட்ட காலத்தில், ஸ்ருதி மீது அதிகமாக பட்ட வெளிச்சம் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலுடன் தான். பல இடங்களில் இருவரும் கைகோர்த்து சென்றனர். கண்ணதாசன் பேரன் திருமணத்தில் கூட இருவரும் தமிழ் பாரம்பரியப்படி உடை அணிந்து வந்திருந்தது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கமல்ஹாசனும், சரிகாவும் இவர்கள் காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டதாக தகவல்கள் றெக்கை கட்டியது. ஒருவருக்காக இன்னொருவர் உருகி போட்ட டூவிட்கள் எல்லாம் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது.

இந்நிலையில், மைக்கேலுடனான காதல் குறித்து ஸ்ருதிஹாசன் மனம் திறந்து இருக்கிறார். மைக்கேல் என் நண்பர். இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால், நான் இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன். திருமணம் நிச்சயமானால் உடனே அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

எல்லா பிரபல ஜோடிகளும் திருமணத்திற்கு முந்தைய இரவு வரை தங்கள் காதலை மூடியே வைத்திருப்பார்கள். இவ்வளவு தெளிவாக பேசிய ஸ்ருதி, மைக்கேலை ஏன் தன் காதலன் இல்லை எனக் கூறவில்லை. சம்திங் சம்திங் தான் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றணார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top