படப்பிடிப்பில் மோசமான ஆட்டிட்யூட்.. கேரியரை தொலைத்த ஸ்ருதி ஹாசன்

சினிமா துறையில் நடிப்பில் ஜாம்பவானாக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். அவருக்கு சுருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். அவர்களும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

அதில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அவர் தமிழில் கடைசியாக நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பொதுவாக விஜய் சேதுபதி ரசிகர்களுடன் மிகவும் இயல்பாக பழகுபவர். ரசிகர்களை எங்கு பார்த்தாலும் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவார்.

இதனால் தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.அதேபோல் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் ரசிகர்கள் பலரும் விஜய்சேதுபதியுடன் போட்டோ எடுக்க ஆர்வமாக இருந்துள்ளனர். அதனால் அவரும் மறுக்காமல் ரசிகர்களுடன் இணைந்து கட்டிப்பிடித்தபடி போட்டோ எடுத்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருப்பதை பார்த்த சுருதி ஹாசன் சிறிது கடுப்பில் இருந்துள்ளார். மேலும் படப்பிடிப்பில் கதாநாயகியான தன்னை யாரும் மதிக்கவில்லை என்று ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன் பிறகு இரண்டு நாட்கள் அவர் படப்பிடிப்புக்கு வராமல் இருந்துள்ளார். இறுதியில் அவரை அனைவரும் சமாதானப்படுத்திய பின்பே படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதைப் போன்று நிறைய இடத்தில் அவர் பொறாமைப்பட்டு கோபத்துடன் நடந்த காரணத்தால் தான் அவருக்கு லாபம் படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

தமிழில் எந்த படமும் இல்லாத நிலையில் தற்போது சுருதி ஹாசன் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது தவிர வெப் சீரிசிலும்  கவனம் செலுத்தி வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்