Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீரன் படத்தை திருட்டு பிரிண்ட்டில் கூட பாருங்க, ஆனால் இதையும் செய்யுங்கள்- தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அதிரடி.
அட பதறாதீங்க தலைப்பை பார்த்து. உண்மையிலேயே தயாரிப்பாளர் அவர்கள் தன் ட்விட்டரில், சினிமா ரசிகர் ஒருவருக்கு இப்படி தான் பதில் அளித்திருக்கிறார். எனினும் முழுதாக படிங்க அவர் சொல்ல வந்த அர்த்தம் புரியும்.
தீரன் அதிகாரம் ஒன்று
சதுரங்க வேட்டை இயக்குனரின் அடுத்த படைப்பு தீரன் அதிகாரம் ஒன்று. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படம், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று படம், அனைவராலும் பாராட்ட பட்டு வருகிறது. ஏ, பி, சி என்று மூன்று வித ரசிகர்களையும் கவர்ந்து விட்டது இப்படம்.
நம்ம தமிழ் சினிமாவில் போலீசை சூப்பர்மேன் போன்று சித்தரிக்கும் படங்களே அதிகம். ஒரு சில படங்கள் மட்டுமே யதார்த்தமாக காவல் துறையை சித்தரித்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை உணர்த்தியுள்ளது இப்படம் . போலீஸ் அதிகாரிகள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது. போலீஸ் டிரைனிங்கில் அவர்கள் போலீசாக மாற மட்டும் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தீரன்னில் உண்மையான ஒரு போலீஸ் அதிகாரியை நாம் பார்க்க முடிகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு
எஸ்.ஆர்.பிரபு வளர்ந்து வரும் ஒரு தயாரிப்பாளர் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களின் பாணரில் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் கண்டிப்பாக படம் நன்றாக தான் இருக்கும், என்ற பெயரை இந்நிறுவனம் மிக குறைந்த வருடங்களிலேயே பெற்றுவிட்டது.
மாயா, ஜோக்கர், காஷ்மோரா, மாநகரம் அந்த வரிசியில் தீரன் ரிலீஸ் ஆகியுள்ளது. பல சர்வதேச விருதுகளை பெற்ற “அருவி” படம் அடுத்து ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரிடம்; சினிமா ரசிகர் ட்விட்டரில் இந்த கேள்வியை கேட்டார் –
‘பிரபு சார், எதாவது வழி உள்ளதா, ஆன்லைனில் HD தரத்தில், ஆங்கில சப் டைடிலுடன் ஒரு முறை இப்படத்தை பார்ப்பதற்கு. நான் இருக்கும் இடத்தில,சப் டைடிலுடன் ரிலீஸ் ஆகவில்லை. இந்த திரில்லர் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன். உதவுங்கள் ப்ளீஸ்.’
@prabhu_sr Sir , is there anyway I could pay for an online HD one time watch with English subtitles for Theeran movie , the place I reside does not play with subs , dying to watch the thriller with subs . pls kindly help .
— 1 in million (@lawyertiger) November 18, 2017
இதற்க்கு தான் பதில் ட்வீட் போட்டார் பிரபு.
Pls wait for 25days if possible #amazonprimevideo . Else find a good quality pirated copy which are plenty online and donate 10$ to someone who needs it badly, in the name of #TheeranAdhigaaramOndru ! I will be happy & trust me u will also be happy???
— S.R.Prabhu (@prabhu_sr) November 18, 2017
முடிந்தால் 25 நாட்கள் வெயிட் பண்ணுங்க, அமேசான் பிரைம் வீடியோவில் வரும். இல்லையென்றால் இணையத்தில் ஏராளமாக உள்ள திருட்டு பிரிண்ட்டில் நல்ல தரத்தில் உள்ளதை பாருங்கள். பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று பெயரை சொல்லி, தேவையில் இருக்கும் ஒருவருக்கு 10 டாலர் தானம் செய்யுங்கள். நானும் மகிழ்ச்சி அடைவேன்; நம்புங்கள் நீங்களும் ஆனந்தம் அடைவீர்கள்.”
இதற்கு அந்த நபர் – “உங்கள் செய்கைக்கு நன்றி. நான் பைரசியை ஆதரிப்பவன் அல்ல. நான் வெயிட் செய்து அமேசானில் பார்த்துக்கொள்கிறேன். தேவையில் இருக்கும் ஒருவருக்கு கண்டிப்பாக உங்கள் படத்தின் பெயரை சொல்லி 10 டாலர் தருவேன். மீண்டும் என் நன்றிகள். படம் வெற்றி அடைந்ததும் என் வாழ்த்துக்கள்.”
Thank you for your wonderful gesture . I'll wait for 25 days @ Amazon ,do not want promote any piracy. I will still donate 10$ to someone who needs it badly in the name of #TheeranAdhigaaramOndru . Thanks once again 4 ur gesture 🙂 Congratulations on the success of the movie.
— 1 in million (@lawyertiger) November 19, 2017
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
விஷால் தலைமையில் இந்த பைரசியை ஒழிக்க திரையுலகமே கடினமாக முயன்று வரும் வேலையில். தயாரிப்பாளராக தன் மனக்குமுறலை கொட்டி தீர்க்காமல். மிக யதார்த்தமாக, பதட்டம் ஆகாமல் இவர் அளித்த பதில் இப்பொழுது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை திருட்டை ஒழிக்க முடியாது.
