11 வது சீசன் ஐபில் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகின்றது. இந்த சீசனில் பல அணிகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தது. புதிய கேப்டன்கள், கோச்சிங் ஸ்டாப் என்று ஐபில் ஆரம்பிக்கும் முன்னரே பல ஆச்சர்யங்கள் நடந்தேறின.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மற்றும் ஜூஹி சாவ்லா தான் அணியின் பிரதான உரிமையாளர்கள். இந்த சீசன் கம்பிர் அவர்களை அணி நிர்வாகம் எடுக்கவில்லை. மேலும் யூ 19 உலகக்கோப்பையில் நான்றாக ஆடிய மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பல வீரர்களை எடுத்தனர். தமிழகத்தின் தினேஷ் கார்த்திகை கேப்டனாக நியமித்தனர்.

DK – KKR

ஆர்மபத்தில் சிறப்பான துவக்கத்தை கொடுத்த இந்த அணி, நடுவில் தடுமாறியது. பிலே ஆப் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெறுமா என்ற நிலை வந்தது. எனினும் பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அதிரடி பேட்டிங் புரிந்தனர். இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோர் இவர்கள் அடித்த 245 தான். மேலும் அந்த போட்டியிலும் வெற்றி பெற்றனர். தற்பொழுது 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் இன்று ஷாருக் கான் தன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.

SRK

“ஆட்டத்திற்கு முன் நான் சற்றே கவலையாக இருந்ததால், எங்கள் அணியின் காப்டன் தினேஷ் கார்த்திக் என்னை சிரிக்க சொன்னார். இந்த போட்டோ அவருக்காக. நன்றி டு ரஸ்ஸல், நரேன், பிரஷித் மற்றும் கே கே ஆர் டீம். மேல்நோக்கி பயணிப்போம்.” என்று அதில் கூறியுள்ளார்.