கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

SRK

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மற்றும் ஜூஹி சாவ்லா தான் அணியின் பிரதான உரிமையாளர்கள். இந்த சீசன் கம்பிர் அவர்களை அணி நிர்வாகம் எடுக்கவில்லை. மேலும் யூ 19 உலகக்கோப்பையில் நான்றாக ஆடிய மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பல வீரர்களை எடுத்தனர். தமிழகத்தின் தினேஷ் கார்த்திகை கேப்டனாக நியமித்தனர்.

ஆர்மபத்தில் சிறப்பான துவக்கத்தை கொடுத்த இந்த அணி, நடுவில் தடுமாறியது. பிலே ஆப் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெறுமா என்ற நிலை வந்தது. எனினும் நேற்றய போட்டியில் வெற்றி பெற்றால் கட்டாயம் தகுதி பெற்றுவிடும் என்பது தான் நிலை. லக்கை நம்பாமல் தங்கள் கை வசம் வாய்ப்பை வைத்திருந்தனர்.

KKR VS SRH

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதிரடி துவக்கமாக இருந்தது. தவான், கோஸ்வாமி, வில்லியம்சன் கலக்கினார்கள். 10 வது ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 100 ரன் கடந்தது இந்த அணி. எனினும் அதன் பின் அசத்தலாக பந்து வீசியது கொல்கத்தா. நரேன், பிரசித்தி கிருஷ்ணா சிறப்பாக பந்துவீசினார். கிருஷ்ணா நான்கு விக்கெட் எடுத்தார். டார்கெட் 173 என முடிவானது.

வழக்கம் போல் அதிரடி துவக்கத்தை கொடுத்தார் நரேன். லின் , உத்தப்பா , கார்த்திக் என அனைவரின் அசத்தல் அதிரடி ஆட்டத்தால், இந்த அணி எளிதில் ஐந்து விக்கெட் வித்யசத்தில் வென்றது. லின் மேன் ஆப் தி மேட்ச் விருதை பெற்றார். கொல்கத்தா பிலே – ஆப் சுற்றுக்கு தகுதி ஆனது.

இந்நிலையில் ஷாருக் கான் தன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.

KKR

“இந்த சிரிப்பை பார்ப்பதற்காக 24 மணிநேரமாக காத்திருந்தேன். நன்றி கார்த்திக், பிரசித்தி (சிறப்பாக செயல்பட்டாய்). உத்தப்பா (நாம் ஒன்றாக ஜிம் செல்ல வேண்டும்). லின் (வாவ் நண்பா). சுனில் … ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எனினும் தூங்க முடியவில்லை. ” என்று தன் அணி வீரர்களுக்கு ட்வீட் வாயிலாக தன் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் ஷாருக்.