ஷாருக்கான்

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கும் “ஜீரோ” படத்தில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட்டில் செண்டிமெண்ட் கலந்த காதல் கதைகள் எடுப்பதில் வித்தகர். தனுஷின் ‘ரான்ஜஹானா’ அதாங்க ‘அம்பிகாபதி’, மாதவன் நடிப்பில் ‘தனு வெட்ஸ் மனு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் .

SRK ZERO

ஜீரோ

இந்த படத்தில் ஷாருக் அபூர்வ சகோதரர்கள் அப்பு கமல் ஸ்டைலில் குள்ள மனிதனாக நடிக்கிறார்.இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தை ‘கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஷாரூக்கின் ‘ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரித்து வருகின்றது. படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர் படக்குழு.

அதிகம் படித்தவை:  எம்.ஜி.ஆர். பட தலைப்பில் என் மகன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது- பிரேமலதா விஜயகாந்த்.
zero srk

இந்நிலையில் ஷாருக் தன் ட்விட்டரில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தூங்குவது போன்ற போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.

மேலும் அவர் “என்னால் கண்களை திறக்க முடியவில்லை. என்னை விடயற்காலையே சூட்டிங் அழைத்ததற்கு அனுபவிக்கட்டும்” என்று கூறியுள்ளார். மேலும் இந்த போட்டோவை எடுத்து என் மீடியா மானேஜர் கத்ரினா கைப் என்று வேறு கிண்டல் செய்துள்ளார்.

#Zero #SRK #SharukhKhan #katrinakaif #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இவ்வாறு குசும்பாய் படக்குழுவை ஷாருக் கிண்டல் செய்ய. இந்த ட்வீட் வைரலானது. இதனை கிட்டத்தட்ட 63000 பேர் லைக், 7000 நபர்கள் ரி – ட்வீட் செய்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  இணையத்தில் வைரலாகுது பள்ளி மாணவர்கள் எடுத்துள்ள அவென்ஜ்ர்ஸ் - இன்பினிட்டி வார் ட்ரைலர் !

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

sridevi

இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி,  ராணி முக்ஹெர்ஜீ,  கஜோல் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.