fbpx
Connect with us

Cinemapettai

குள்ள மனிதனாக ஷாருக்கான் நடிக்கும் படத்தின் டைட்டில், டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே ! !

News | செய்திகள்

குள்ள மனிதனாக ஷாருக்கான் நடிக்கும் படத்தின் டைட்டில், டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே ! !

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், இயக்குனர்  ஆனந்த்.எல்.ராய் இயக்கும் படத்தில் சில மாதங்களாகவே  நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று புத்தாண்டு ஸ்பெஷல் ஆக இப்படத்தின்  டைடில், ஷாரூக்கின் முதல் லுக் போஸ்டர் மற்றும் சிறு டீசரை வெளியிட்டுள்ளனர்.

ஷாருக்கான்

SRK

ஷாருக்கான் முன்பு போல அதிக படங்கள் நடிப்பதை தவிர்த்து விட்டார். வருடத்திற்கு ஒரு படம் என்பது தான் அவரின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அதிலும் வித்யாசமான முயற்சியை எடுப்பதிலும் அவர் தவறுவதில்லை. அந்த வகையில் தான் தற்பொழுது  ஆனந்த்.எல்.ராய் இயக்கம் படத்தில் குள்ள மனிதன் அவதாரம் எடுத்துள்ளார்.

ஆனந்த்.எல்.ராய்

இவர் பாலிவுட்டில் செண்டிமெண்ட் கலந்த காதல் கதைகள் எடுப்பதில் வித்தகர். தனுஷின் ‘ரான்ஜஹானா’ அதாங்க ‘அம்பிகாபதி’, மாதவன் நடிப்பில் ‘தனு வெட்ஸ் மனு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் .

SRK

ஜீரோ

இப்படத்தின்  ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்திற்கு ‘ஜீரோ’ (ZERO) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக ட்விட்டரில் ஷாருக்  தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தை ‘கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஷாரூக்கின் ‘ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரித்து வருகின்றது.

srk in zero flp

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர் படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top