Connect with us
Cinemapettai

Cinemapettai

srividya

Entertainment | பொழுதுபோக்கு

ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை சீரழித்த 5 பிரபலங்கள்.. மரணப் படுக்கையில் கூட ஏமாற்றிய துரோகிகள்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவையான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் அம்மாவாக பல படங்களில் நடித்து நமது மனதை கொள்ளை அடித்த, சொந்த வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்த, நடிகை ஶ்ரீவித்யா அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பார்க்கலாம்.

ஶ்ரீவித்யா என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அவர் நடித்த பல சுவாரசியமான திரைப்படங்கள். பரதநாட்டிய கலைஞராக, கதாநாயகியாக, குணசித்திர நடிகையாக, அம்மா நடிகையாக என்று பல ரோல்களில் நமக்கு நன்கு அறியப்பட்ட நடிகை ஸ்ரீவித்யா. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அம்மாவாக தளபதி படத்தில் நடித்ததும் புன்னகை மன்னன் திரைப்படத்தில் சாப்ளின் செல்லப்பாவாக வந்த கமலுக்கு ஜோடியாகவும் சிறப்பாக நடித்திருப்பார். அந்த அளவுக்கு அவர் நமது குடும்பத்தில் ஒருவர் போன்ற தோற்றத்தை கொண்டவர். சிறப்பாக நடிக்கும் திறமையும் பெற்றவர்.

கலைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஸ்ரீவித்யாவின் திரைப்பயணம் எளிதாக அமைந்து விடவில்லை. ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் பரத நாட்டிய கலைஞராகவும் நடன மங்கையாக வந்து போயிருந்தார். ஒரு நடிகையாக அவர் முழு கவனம் பெற்றது ஜெய்சங்கருடன் நடித்த நூற்றுக்கு நூறு என்ற திரைப்படத்தின் மூலம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பல புதுமுக நடிகர்களுடன் இணைந்து நடித்த காலத்தில் இவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதாக இருந்தது. என்றாலும் ஸ்ரீவித்யாவுக்கு முகத்தில் முதிர்ச்சி வராத காரணத்தால் கதாநாயகி வாய்ப்பை இழந்தார் என்று பின்னாளில் அறியப்படுகிறது. இதன் மூலம் எம்ஜிஆர் உடன் ஜோடி சேரும் அவரது கனவு தகர்ந்தது. அதே நேரத்தில் மஞ்சுளா, லதா போன்ற நடிகைகள் மக்கள் திலகத்துடன் சேர்ந்து நடித்து புகழ்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையில் அடுத்ததாக முக்கிய நபராக நுழைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன். அப்போது அவர் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து கொண்டிருந்தார். சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற திரைப்படம் மூலமாக இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது முதலில் இருவருக் குள்ளும் நல்ல நட்பு உருவானது. பல பத்திரிகைகள் அவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு எழுதியது.

அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத அவர்கள் இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்தனர். பல படங்களில் தொடர்ந்து இணைந்து நடித்து வந்தனர். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த உணர்ச்சிகள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமான அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களும் இதில் அடக்கம். அதே நேரத்தில் வாணி கணபதி என்பவருடன் கமல்ஹாசன் காதலில் இருந்தார். இந்த செய்தி பரவிய பின்பு அவர்கள் இருவரும் சீக்கிரமே திருமணம் செய்து கொண்டனர்.

இதுவரை வாழ்வில் பெரிய கஷ்டங்கள் இல்லாமல் போய்க்கொண்டிருந்த ஸ்ரீவித்யாவிற்கு பேரிடியாக வந்து அமைந்தார் அவரது கணவர் மற்றும் காதலர் ஜார்ஜ் தாமஸ். மலையாளத் திரைப்படங்களில் தயாரிப்பாளரான தாமஸை ஷூட்டிங் நிமித்தமாக சந்திக்க ஆரம்பித்தார் ஸ்ரீவித்யா. நாளடைவில் அவர்கள் இருவருக்கும் பழக்கம் நட்பாகி பின்னர் காதலானது. ஜார்ஜ் தாமஸ் மீது அளவு கடந்த அன்பு மற்றும் நம்பிக்கை கொண்டிருந்த ஸ்ரீவித்யா அவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு குட்பை சொன்னார். ஆனால் அவரது கேட்ட நேரம் ஜோஸ் தாமஸ் பண சிக்கலில் மாட்டிக் கொள்ள அவருக்காக மீண்டும் நடிக்க தொடங்கினார் ஸ்ரீவித்யா.

ஸ்ரீவித்யாவின் இரண்டாவது இன்னிங்ஸ் நன்றாகவே அமைந்தது. தமிழ் மலையாளம் என்று இரு மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது கணவரான ஜார்ஜ் தாமஸ் மேனேஜராக செயல்பட்டார். அப்போது அவர் ஸ்ரீவித்யாவை பல வழிகளில் ஏமாற்றியுள்ளார். அவர் சம்பாதித்த பணத்தை முறைகேடாக கையாடல் செய்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் செய்த திருட்டுத்தனம் எல்லாம் ஸ்ரீவித்யாவுக்கு தெரியவர அவரை விட்டு விலக முடிவு செய்தார். ஆனபோதும் அவர் சம்பாதித்த இருந்த பல ரூபாய் சொத்துக்களை ஜோஸ் தாமஸ் ஏற்கனவே தன்வசம் ஆக்கிக் கொண்டிருந்தார். காதல் கணவனால் கைவிடப்பட்ட ஸ்ரீவித்யா முறைப்படி அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வாழ ஆரம்பித்தார். நடிப்பு மட்டுமே தொழிலாக இருந்த அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து மீண்டும் சம்பாத்தியத்தை உருவாக்கினார்.

தொடர்ந்து கமல்ஹாசன் உதவியுடன் ஸ்ரீவித்யா பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் தாய் கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்து வந்தார். சேதுபதி ஐபிஎஸ், புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள் என்று பல திரைப்படங்களில் கவனிக்கும்படி நடித்து வந்தார். தமிழில் எந்த அளவுக்கு பிஸியாக இருந்தாரோ அதே அளவிற்கு மலையாளத்திலும் பிசியாக நடித்து வந்தார். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த வரும் தேவர்மகன் ஆவாரம்பூ சத்ரியன் ஆகிய படங்களை இயக்கிய பரதன் என்கிற இயக்குனரிடம் அவர் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இறந்த மலையாள நடிகையான லலிதாவின் கணவர்தான் இந்த பரதன் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையில் தான் சந்தித்த விரும்பிய ஆண்கள் யாரும் தனது வாழ்க்கையின் நிலைக்கவில்லை என்ற சோகம் ஸ்ரீவித்யாவின் மனதில் எப்போதும் இருந்தாலும் முகத்தில் புன்னகையை மட்டுமே சுமந்து கொண்டிருந்தார். சென்னையில் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தார் ஸ்ரீவித்யா. அப்படி வால்பே சுமூகமாகப் போய்க் கொண்டிருந்த போது தன்னை விட 8 வயது இளையவரான கேபி. கணேஷ் குமார் என்கிற மலையாள நடிகரும் மலையாள சட்டமன்ற உறுப்பினருமான அவருடன் நட்பு பாராட்டினார் ஸ்ரீவித்யா. பத்திரிக்கைகள் இவர்கள் இருவரும் காதலிப்பதாக எழுதிய போதும் அவர்களது நட்பு தொடர்ந்தது.

இப்படி ஒரு நிலையற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஸ்ரீவித்யாவின் இறுதி நாட்களில் பேரிடியாக வந்து இறங்கியது அவருடைய முதுகு தண்டுவட புற்றுநோய். இந்த நோய் வந்தபின் அவர் முற்றிலுமாக சினிமாத்துறையில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். கணேஷ் குமார் அவர்களின் உதவியுடன் அவ்வப்போது மருத்துவமனை சென்று மருத்துவம் பெறுவதும் மருந்துகள் பெறுவதும் என்று இருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவருடைய புற்றுநோய் அதிகமாக வேறு வழியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்க பெற்றார்.

அந்த சமயத்தில் அவரை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் மட்டும்தான். இதுவரை தனக்கு எந்த ஒரு நிலையான ஆண் துணையும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் ஸ்ரீ வித்யா தனது சொத்துக்களை மாற்றி அதன் மூலம் பல நடன கலைஞர்களை உருவாக்க முடிவெடுத்தார். அதன் பொறுப்பை கேபி கணேஷ்குமார் இடமே ஒப்படைத்தார் அவர். அந்த டிரஸ்டை முறையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைத்தார் ஸ்ரீவித்யாவின் அண்ணன்.

இவ்வளவு திறமையான நடிகையாக வலம் வந்த ஸ்ரீவித்யாவின் சொந்த வாழ்க்கை எவ்வளவு சோகமாக அமைந்தது என்று நாம் நினைக்கும் போது நமது கண்களில் நிச்சயம் நீர்த்துளி எட்டிப் பார்க்கும். இவ்வளவு நடந்த பிறகும் அவர் யார் மீதும் எந்தக் குற்றமும் சுமத்தவில்லை மாறாக எப்பொழுதும் இருக்கும் அதே புன்னகையுடன் விடைபெற்று நம் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

Continue Reading
To Top