Comeback கொடுத்த ஸ்ரீதிவ்யா.. அடேங்கப்பா.. மெய்யழகன் படத்திற்கு இவ்வளவு சம்பளமா

மெய்யழகன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிநடை போடுகிறது. த்ரிஷா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தை இயக்கி அனைவரையும் Reunion செய்ய வைத்தார் இயக்குனர் பிரேம் குமார். ந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்கி உள்ள இரண்டாவது படம் தான் மெய்யழகன்.

இந்த படத்தில் கார்த்திக்,அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி என பலர் நடித்துள்ளனர். மேலும், சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். குறிப்பாக இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.

தமிழில் வெளியான சிவகார்த்திகேயனின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படம் மூலம் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா, தமிழ், தெலுங்கு மாற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியும், ஏனோ சில காலங்கள் இவருக்கு பட வாய்ப்பு எதுவும் வரவில்லை. முக்கியமாக இவர் பப்பில் குடித்து விட்டு ரகளை செய்தார் என்று ஒரு வீடியோ கூட வைரல் ஆனது. அதற்க்கு பின்பு தான் இவருக்கு படவாய்ப்பு குறைந்தது என்றும் சொல்லப்படுகிறது. வெகு நாட்கள் கழித்து, மலையாளத்தில் ப்ரித்விராஜுடன் இணைந்தார். தற்போது மெய்யழகன் படத்திலும் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், 33 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மெய்யழகன், நேற்று தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படத்தின் முதல் நாள் வசூல், மூன்று கோடியை தாண்டி உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ஸ்ரீ திவ்யா ரூ. 70 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுகையில் இந்த சம்பளம் குறைவு என்றாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் நடித்துள்ளார் என்பதால் இது ஒரு நல்ல சம்பளமாகவே பார்க்க படுகிறது. மேலும் அவருக்கு இந்த படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்க படுகிறது.

- Advertisement -spot_img

Trending News