தமிழ் சினிமாவில் சுஸி லீக்ஸ் வெளியாகி பல நடிகர்கள்,நடிகைகள் அதில் சிக்கினார்கள் அதனால் தமிழ் சினிமாவில் பலர் பதற்றத்திலேயே இருந்தார்கள், ஆனால் அதையும் மிஞ்சுகிறது ஸ்ரீ லீக்ஸ்.

sri reddy

நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் தன்னை கட்டாயபடுத்தி பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை அனுபவித்து விட்டு கம்பி நீட்டிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் என திரைக்கு பின்னால் இருக்கும் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பாகுபலி வில்லன் ராணா தம்பி தன்னை ஸ்டுடியோவில் வைத்து பல முறை என்னை யூஸ் பண்ணிகிட்டார் என திடிக்கிடும் தகவலை கூறினார். அதனால் பல தெலுங்கு சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் தனது வண்டவாளம் எப்பொழுது வரும் என பீதியில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி ஆம் பிரபல தயாரிப்பாளர் 16 வயது சிறுமி முதல் இதுவரை 100 பெண்களுக்கு மேல் பலரை சீரழித்துள்ளார் பிரபல நிர்வாக தயாரிப்பாளரான வக்காடா அப்பா ராவ் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதனால் தெலுங்கு சினிமாவே ஆடிபோய் இருக்கிறது.

இதுவரை அவர் வெளியிட்டதில் இந்த தகவல்தான் பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து பல பிரபலங்களை பற்றி வெளியிட்டு வந்ததற்கு பலர் மறுப்பு தெரிவித்தார்கள், ஆனால் 16 வயது சிறுமியை இந்த நிருவாக தயாரிப்பாளர் சீரழித்துள்ளார் என கூறியும் இதுவரை வக்காடா அப்பா ராவ் எந்த தகவலையும் அறிவிக்கவில்லை.

எனினும் அடுத்தடுத்து பல பிரபலங்களின் லீலைகள் ஸ்ரீ ரெட்டி வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வரும் நிலையில் பல பிரபலங்கள் தங்களை பற்றிய தகவல் வெளியாகிடுமோ என பீதியில் இருக்கிறார்கள்.