Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் அந்த ஒருத்தரை பார்த்த அருவருப்பாக இருக்கும் என கூறிய பிரபலம்.. இதுக்கு மேல யாரும் அசிங்க படுத்த முடியாது.!
ரசிகர்களிடையே பிரபல நியூஸ் வாசிப்பாளராக இருப்பவர் அனிதா சம்பத். அனிதா சர்க்கார், 2.o போன்ற ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார். ஆனால் ரசிகர்களிடையே நல்ல பிரபலம் அடைந்தாலும் சினிமாவில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே வாய்ப்பு வருவதால் மனமுடைந்த அனிதா பிக்பாஸில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தும் அதனை ஏற்றுக்கொண்டார்.
பிக் பாஸ் நான்காவது சீசனில் பல சண்டை சச்சரவு என போய்க்கொண்டிருக்கும் நிலையில் ரேகா, வேல்முருகன், சம்யுக்தா போன்ற போட்டியாளர்கள் வெளியேறினர். சமீபத்தில் கூட சனம் ஷெட்டி பிக்பாஸில் இருந்து வெளியேறியது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
முதலில் தைரியமாக இருந்த அனிதா அவ்வப்போது மனமுடைந்து அழுது வருகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் அனிதாவின் உண்மை குணம் இதுதானா சில நேரங்களில் கோபப்பட்டு திட்டுகிறார் பின்பு அழுகையும் செய்கிறார்.
இது எது உண்மை என தெரிய வில்லையே என ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்த நிலையில், தமிழ் சினிமாவில் 108 படங்களுக்கு மேல் நடித்தவர் தான் ஸ்ரீபிரியா, அவரது ட்விட்டர் பக்கத்தில் அனிதா அழுகாத அருவருப்பாக இருக்கிறது என அதில் பதிவிட்டுள்ளார்.

sri priya
அதை கண்ட சில ரசிகர்கள் ஆதரவு, பல ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீங்களும் சினிமா துறையில் பணியாற்றியவர் தான இப்படி செய்யலாமா என பலரும் முணுமுணுத்து வருகின்றனர்.
