ரஜினி, கமலை தூக்கிவிட்ட அன்றைய லேடி சூப்பர் ஸ்டார்.. 20க்கும் மேல் ஹிட் கொடுத்த படங்களின் லிஸ்ட்

70, 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார். இந்த நடிகை கிட்டத்தட்ட 350 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான அனைத்தும் 80 சதவீதத்திற்கு மேல் சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்கள். இவர் ரஜினியுடன் 30 படங்களும், கமலுடன் 28 படங்களும் நடித்துள்ளார்.

ராதா, அம்பிகா, ஸ்ரீதேவி, ராதிகா போன்ற நடிகைகளுக்கு டஃப் கொடுத்தவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் முருகன் காட்டிய வழி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு கே பாலச்சந்தர் இயக்கத்தில் அவள் ஒரு தொடர்கதை படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினி, கமலுடன் இணைந்து அதிக படங்கள் நடித்துள்ளார். ரஜினியுடன் தாய் மீது சத்தியம், அன்னை ஒரு ஆலயம், தனிக்காட்டுராஜா, பில்லா, பைரவி, ஆடுபுலி ஆட்டம், மாங்குடி மைனர் போன்ற பல படங்களில் ஸ்ரீபிரியா நடித்துள்ளார்.

அதேபோல் கமலுடன் இணைந்து ஸ்ரீபிரியா நடித்த படங்கள் நீயா, வாழ்வே மாயம், சட்டம் என் கையில், சிம்லா ஸ்பெஷல், நட்சத்திரம், சவால், எனக்குள் ஒருவன், ராம் லட்சுமணன், பட்டிக்காட்டு ராஜா, பகடை பனிரெண்டு, மோகம் முப்பது வருஷம், மங்கள வாத்தியம், தங்கத்திலே வைரம் என நீண்டுகொண்டே போகும்.

ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான் போன்ற படங்களில் ஸ்ரீபிரியா நடித்துள்ளார். சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகிய ஸ்ரீபிரியா தற்போது மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்படியோ அதே போல் அன்றைய காலத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து சாதனை படைத்தவர் ஸ்ரீபிரியா. தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் ரஜினி கமலை தூக்கி விட்ட பெருமை அவருக்கும் சேரும்.

Next Story

- Advertisement -