Connect with us
Cinemapettai

Cinemapettai

power-star-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பவர் ஸ்டாருக்கு பட்டப்பெயர் வைத்த படக்குழு.. வேற லெவல் போங்க.!

இணையத்தில் எப்போதும் சர்ச்சையால் வைரல் ஆனவர் வனிதா விஜயகுமார். தற்போது அவருடைய திருமணக்கோலம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. ஏற்கனவே 3 திருமண பந்தங்கள் பாதியிலேயே முடிந்து விட்ட நிலையில் தற்போது நாலாவதாக திருமணமா ? என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

வனிதாவும் பவர் ஸ்டாரும் மாலையுடன் திருமண கோலத்தில் வெளியான புகைப்படம் இந்த அதிர்ச்சிக்கு காரணம். இந்த புகைப்படம் வனிதா புதிதாக நடிக்க உள்ள பிக்கப் என்ற திரைப்படத்தின் புகைப்படம் ஆகும். பவர் ஸ்டாருடன் இணைந்து வனிதா விஜயகுமார் பிக்கப் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் .

மேலும் இத்திரைப்படத்தில் சேலம் ஆர்ஆர் பிரியாணி கடைகளில் உரிமையாளரான தமிழ்ச்செல்வன், ஜி பி முத்து, செந்தில், மீனாட்சி காயத்ரி, ரோஷன், ஹர்ஷிதா தேவி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். திரைப்படம் திகில் நிறைந்த காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் வனிதா பவர்ஸ்டாரை மூன்றாவதாக திருமணம் செய்து ஒரு பங்களாவில் வசிக்கிறார்.

vanitha-power-star-1

vanitha-power-star-1

அங்கு பேய்களின் அட்டகாசம் தொடங்குவது போலவும் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இந்த திரைப்படத்திற்கு பவர்ஸ்டார் அவர்களை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மேலும் இப்படம் அவருக்கு நூறாவது படம் என்று சொல்லப்படுகிறது.

அதனால் இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு பவர்ஸ்டார் அவர்களை இசையமைத்து இசையமைப்பாளராகவும் மறு அவதாரம் எடுக்கிறார். மேலும், இத்திரைப்படத்தில் வனிதாவின் பெயருக்கு முன் வைரல் ஸ்டார் என்று பட்டம் கொடுக்கப்பட்ட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Continue Reading
To Top