தோனியும் சிஎஸ்கேவும் என்றுமே இப்படிதான்.. மனம் திறந்த பெரிய முதலாளி! குவியுது லைக்ஸ்

ஐபிஎல் பொறுத்த வரை என்றுமே ஜாம்பவான் டீம் சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் சென்ற முறை டீம் படு தோல்வி தழுவியது. கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் துபாய்க்கு மாறின, டீம் தடுமாறியது. தோனி சங்கடத்தில் நெளிந்தார். இதெல்லாம் சென்ற வருட கதை. இம்முறை அடுத்த சீசன், ஏப்ரல் 9 போட்டிகள் ஆரம்பிக்கின்றனர்.

இந்நிலையில் நம் சேப்பாக்கத்தில் சி அஸ் கே தங்கள் பயிற்சி கேம்ப்பை ஆரம்பித்து விட்டனர். தோனி, ராயுடு, ஹரி நிஷாந்த், சாய் கிஷோர், ருத்ராஜ் கைக்கவாட் போன்றவர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். மேலும் இந்த வருடம் ரெய்னா டீமுக்கு திரும்பிட்டார். ஏலத்தில் மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம், ட்ரான்ஸபாரில் உத்தப்பா போன்ற வீரர்கள் புதிதாக டீம்மில் இணையவும் உள்ளனர்.

இந்த சூழலில் தற்போது மகேந்திரசிங் தோனி மற்றும் சி எஸ் கே உடனான பந்தம் குறித்துப் பேசிய சிஎஸ்கே உரிமையாளர் ஸ்ரீனிவாசன் பின்வருமாறு பேசியுள்ளார்.

“தோனி தற்போது சென்னையில் தான் உள்ளார். அவர் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். காலையில் உள் விளையாட்டு அரங்கிலும், மாலையில் சேப்பாக்கத்திலும் பயிற்சி மேற்கொள்கிறார்.

csk dhoni

தோனி மிகவும் உறுதியான நோக்குடன் இருப்பவர், அதனால்தான் அவரை எங்களுக்கு பிடித்திருக்கிறது. கிரிக்கெட், ஐபிஎல் இது அனைத்திலும் வெற்றிதான் முக்கியம் எனினும் நம்பகத்தன்மை, விசுவாசம் இதுவும் முக்கியம் தான். அதனை தான் தோனிக்காக நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம். தோனி கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறார்.

கிரிக்கெட் மற்றும் எங்கள் குழுமத்திற்கான பந்தம் 50 வருட பரம்பர்யத்திற்கு மேலானது. ரஞ்சி டீமுடன் இணைந்து இருந்தோம், பல டீம்களை இதுவரை நடத்தியும் உள்ளோம். சிறந்த கிரிக்கெட்டுக்கு என்றுமே எங்களின் ஆதரவு உண்டு.” என தெரிவித்துள்ளார்.