சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கேஜிஎஃப் நாயகிக்கு இந்த ஹீரோவை தான் பிடிக்குமாம்.. பாக்ஸ் ஆபிஸ் கிங் காதில் விழுந்துச்சா?

ஒரு படம் வெற்றி அடைந்தாலும் அதில் நடித்த அனைவர்க்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதில்லை. அப்படி வரவில்லை என்றால் ஏதாவது ஒரு பேட்டியில் நடிகர்களுக்கோ, இயக்குனர்களுக்கோ ஒரு வாய்ப்பு நோட்டிஸ் அனுப்பி வைப்பார்கள். அந்த நிலைமைதான் ஸ்ரீநிதி செட்டிக்கும் வந்துள்ளது.

கே ஜி எஃப் படம் உலகம் முழுவதும் 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் கேஜிஎப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது விக்ரமுக்கு ஜோடியாக கோப்ரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் இருபதிற்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடித்துள்ளாராம்.  இந்நிலையில் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இதில் விக்ரம் கலந்துகொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீநிதி ஷெட்டி கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பேசிய ஸ்ரீநிதி நான் விஜய்யின் தீவிர ரசிகை என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விஜய் நடிப்பில் வெளியான பிகில், மாஸ்டர் படங்களை திரையரங்குக்கு சென்று பார்த்ததாக அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது பீஸ்ட் படத்தையும் பார்க்கப் போகிறேன் என ஸ்ரீநிதி சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் நடிகைகளை தாண்டி பாலிவுட் நடிகைகளும் விஜய்யின் ரசிகை என்பதை பல பேட்டிகளில் அவர்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம்.

தற்போது அந்த வகையில் கேஜிஎஃப் பட நாயகி விஜய்யின் தீவிர ரசிகை என கூறி உள்ளார். இதைப் பார்த்த ஸ்ரீநிதி ஷெட்டி ரசிகர்கள் விரைவில் தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும் என கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News