Tamil Cinema News | சினிமா செய்திகள்
நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவனே விஜய்! வைரலாகுது ஸ்ரீமன் பதிவிட்ட ஸ்டேட்டஸ், லேட்டஸ்ட் செலஃபீ
மாஸ்டர் படம் இன்று ரிலீஸ் ஆகிறது. படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதிக்கு கைதி பிடித்து போக லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு அமைந்தது. புதிய டீம் ஸ்டைலிஷ் விஜய் என இந்த கூட்டணி அமைந்தது.
இப்படம் பாதி விஜய் ஸ்டைல் மீதி என் ஸ்டைல் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள், நக்கல், காமெடி என கமெர்ஷியல் பேக்கேஜ். இப்படத்தில் விஜயின் நெருங்கிய நண்பர்களையும் நடிக்கவைத்துள்ளார் இயக்குனர்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன் தளபதி விஜய் அவர்களை தனது சொந்த காரணத்துக்காக சந்தித்துள்ளார். மேலும் செலஃபீ எடுத்து பதிவிட்டுள்ளார்.
“லவ் யூ. படத்தின் ரிலீசுக்கு முந்தைய தினம் ஒரு ஸ்டார் எவ்வளவு பிஸியாக இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். அந்தநேரத்தில் அவர்களை சந்திக்க முயற்சிக்க கூடாது, எனினும் நான் சந்திக்க வேண்டியது மிக முக்கியமான விஷயம் காரணமாக, அதனை பற்றி விளக்கமாக கூறினேன், அடுத்த வார்த்தை, வா ஸ்ரீ என்றார். நட்புக்கு நீ கொடுக்கும் முக்கியத்துவம் கற்பனை செய்ய முடியாதது. நீ உனது நல்ல மனதிற்கும், கடின உழைப்பிற்கும் கட்டாயம் கலக்குவே.” என பதிவிட்டுள்ளார்.

sriman vijay
இந்த ஸ்டேட்டஸ் பல லைக்ஸ் மற்றும் ரீ ட்வீட் பெற்றுள்ளது.
