தோல்வி பயம்! இலங்கை ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளை!

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது போட்டி பல்லகலேவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9  விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் 5, கோஹ்லி 3, ராகுல் 17 மற்றும் கேதர் ஜாதவ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் கொடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய தோனி மறுமுனையில் தனி ஒருவனாக போராடிய ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்.


இந்த ஜோடியை பிரிக்க இலங்கை வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் கோபமடைந்த இலங்கை ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்றபோது திடீரென மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி எறிய தொடங்கியுள்ளனர்.

இதனால் போட்டி சிறிது நேரம் தாமதிக்கப்பட்டுள்ளது.


இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9  விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் 5, கோஹ்லி 3, ராகுல் 17 மற்றும் கேதர் ஜாதவ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் கொடுத்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய தோனி மறுமுனையில் தனி ஒருவனாக போராடிய ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்த ஜோடியை பிரிக்க இலங்கை வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.

இதனால் கோபமடைந்த இலங்கை ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்றபோது திடீரென மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி எறிய தொடங்கியுள்ளனர்.

இதனால் போட்டி சிறிது நேரம் தாமதிக்கப்பட்டுள்ளது.

Comments

comments

More Cinema News: