fbpx
Connect with us

Cinemapettai

இலங்கை கொடூரத் தாக்குதலுக்கு இவர்கள் தான் காரணம்..! பகீர் தகவல்.. உலக நாடுகள் கண்டனம்

srilanka

India | இந்தியா

இலங்கை கொடூரத் தாக்குதலுக்கு இவர்கள் தான் காரணம்..! பகீர் தகவல்.. உலக நாடுகள் கண்டனம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இந்தியர் மூன்று பேர் இறந்திருக்கக் கூடும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதன் அடுத்து 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது போன்ற எதிர்பாராத தாக்குதலினால் அப்பாவிப் பொதுமக்கள் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 207 பேர் இறந்திருக்கக் கூடும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதில் கொழும்புவில் மட்டும் உயிரிழந்தவர்கள் 27 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர். இதில் முக்கியமாக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதற்குப் பின்பு மதியம் 2 மணி அளவில் மீண்டும் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் யார் நடத்தினார் என்று இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை இலங்கை அரசு தெரிவித்துள்ளது, இதில் முக்கியமாக உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என தெரிவித்துள்ளனர்.

தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்று நள்ளிரவு முதல் அதிபர் சிறிசேனா அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.

மேலும் நாளை தேசிய துக்க தினம் அனுசரிக்கவும் அரசு முடிவெடுத்துள்ளதாக அவர் கூறிபிட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top