இதெல்லாம் பார்த்தா ரஜினி அரசியலை அடக்க ஒரு முயற்சியாக கூட இருக்கலாம். புது புது பிரச்சனை அதுவும் இலங்கையை வைத்தே குறி வைக்கிறார்கள் .

லைகா நிறுவனம் கட்டிய வீடுகளை தமிழர்களுக்கு கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்துகொள்ள ரஜினி சென்ற மாதம் இலங்கை செல்லவிருந்தார். ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் ரஜினி தன் பயணத்தை ரத்து செய்தார்.

இந்நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாணயாகே ரஜினியை இலங்கைக்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளார்.

ரஜினிக்கு இலங்கையில் எந்த எதிர்ப்பும் கிடையாது, அவர் ஆசைப்பட்டால் அங்கு வரலாம் என மேலும் அவர் கூறியுள்ளார்.