Tamil Cinema News | சினிமா செய்திகள்
படுவித்தியாசமாக வெளியான ஸ்ரீகாந்தின் எக்கோ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. ஒரு வழியா ஃபார்முக்கு வந்துவிட்டார்!
சினிமாவை பொருத்தவரை வாழ்ந்து கெட்டவர்கள் நிறைய உண்டு. அந்தவகையில் சாக்லேட் பாயாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஸ்ரீகாந்த் தற்போது ஒரு வெற்றி கொடுக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார். கடைசியாக ஸ்ரீகாந்த் நடித்த படமென்றால் ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது விஜய்யுடன் 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படம் தான்.
அதன்பிறகு ஸ்ரீகாந்த் பல படங்களில் நடித்தாலும் அந்த படம்தான் இன்னும் நினைவூட்டுகிறது. இதனால் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தான் ஒரு ஹீரோ என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ஸ்ரீகாந்த்.
வித்தியாசமான முயற்சிகள் பல செய்தும் ஸ்ரீகாந்துக்கு தோல்விகளே மிஞ்சியது. இந்நிலையில் பசியில் இருந்தவனுக்கு பிரியாணி கிடைத்ததை போல லட்டு மாதிரி சூப்பரான கதை ஒன்று கிடைத்துவிட்டதாம் ஸ்ரீகாந்துக்கு. சமீபகாலமாக கோலிவுட்டில் திரில்லர் கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் ஸ்ரீகாந்த் அடுத்ததாக எக்கோ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக வித்யா பிரதீப் என்ற நாயகி நடிக்கிறார். சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் எக்கோ படத்தை நவீன் கணேஷ் என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார்.
மேலும் தளபதி விஜய்யின் கில்லி, விக்ரமின் தூள் போன்ற படங்களில் கேமராமேனாக பணியாற்றிய கோபிநாத் ஒளிப்பதிவாளராகவும், ஜான் பீட்டர் இசை அமைப்பாளராகவும் கமிட் ஆகி உள்ளனர். தற்போது எக்கோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

srikanth-echo-firstlook
நீண்ட நாட்களாக தோல்விப்படம் கொடுத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீகாந்துக்கு எக்கோ படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் படமாக அமையும் என அவரது வட்டாரங்களில் செய்திகள் உலா வருகின்றன.
