vijay-srikanth-devaஇசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தற்போது திருநாள், ஜித்தன் 2 போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் இவர் ‘இளையதளபதி’ விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார்.

சமீபத்தில் விஜய்யுடனான தனது நட்பு குறித்து பேசிய அவர், ” சிவகாசி சமயத்தில் நான் வளர்ந்துவரும் ஒரு இசையமைப்பாளர் தான். ஆனால் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் எனக்கு வாய்ப்பு கொடுத்து, ‘ நீங்க எப்படி வேணாலும் மியூசிக் போடுங்க ஸ்ரீ, நான் அதுக்கு நல்லா ஆடுறேன்’னு என்னை உற்சாகப்படுத்தியவர் விஜய்.

நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டால் சினிமாவை பற்றி பேச மாட்டோம். கார்களை பற்றித்தான் பேசுவோம். எனக்கும் அவருக்கும் கார்கள் என்றால் அலாதி பிரியம். தெறியில் கூட என்னோட அப்பா ஒரு பாடல் பாடியுள்ளார். எங்கள் வீட்டில் தற்போது தினமும் அந்த பாடல்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது” என்றார்.