Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிளாப் வாரிசு நடிகருடன் 3 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா.. அய்யோ பாவம்!
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக அறிமுகமாகியும் சரியான வரவேற்பு இல்லை. பின்னர் சிவகார்த்திகேயன் உடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதுவரை எந்த ஒரு இளம் இளம் நடிகைக்கு அப்படி ஒரு வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்ததில்லை என்பதை போல தமிழ் ரசிகர்கள் ஸ்ரீதிவ்யாவை தலையை தூக்கி வைத்துக் கொண்டாடி விட்டனர்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அவரது கெட்ட நேரமோ என்னமோ அவர் நடித்த படங்கள் எதுவுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. கடைசியாக 2017 ஆம் ஆண்டு காஷ்மோரா படத்தில் நடித்திருந்தார்.
காஷ்மோரா படமும் படு தோல்வியை சந்தித்த நிலையில் ஸ்ரீதிவ்யா மார்க்கெட் தமிழ் சினிமாவில் திண்டாடியது. இந்நிலையில்தான் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருக்கும் கவுதம் கார்த்திக்குடன் அடுத்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ரீதிவ்யா. அந்த படத்தை பானாகாத்தாடி மற்றும் செம போத ஆகாதே போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் டிவி நடிகர் ரியோவை வைத்து பிளான் பண்ணி பண்ணனும் படம் அடுத்ததாக ரிலீசாக உள்ளது. இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகிய இருவரையும் வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம் பத்ரி வெங்கடேஷ்.
ஸ்ரீதிவ்யாவின் ரீ என்ட்ரிக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தொடர் தோல்விகளை கொடுத்துக்கொண்டிருக்கும் கவுதம் கார்த்திக்குடன் வருவதுதான் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.

sridivya-cinemapettai-01
