அம்மா காட்டத் தயங்கிய கவர்ச்சியை வாரி வாரி இறைக்கும் ஸ்ரீதேவியின் மகள்.. காதலனுடன் டேட்டிங் செய்த வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என திரைத் துறையில் ரவுண்ட் கட்டி நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி திரைத்துறையில் தொடர்ந்து பல படங்களை நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் 2008 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாய்  உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் பதவிக்கு பிறகு ஜான்வி கபூர் அடிக்கடி காதல், பிரேக் அப், டேட்டிங் போன்ற விஷயங்களில் தொடர்ந்து கிசுகிசுக்கப்படுகிறார்.

Also Read: வெறும் பனியன் போட்டு இணையத்தை அலறவிட்ட ஜான்வி கபூர்.. ஸ்ரீதேவிக்கு இப்படி ஒரு மகளா!

அதுமட்டுமின்றி அம்மா காட்டாத கவர்ச்சியை மகள் ஜான்வி கபூர் வாரி வாரி சோசியல் மீடியாவில் இறைக்கிறார். அந்த அளவிற்கு இவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் கவர்ச்சி தூக்கலாக இருக்கும். அதுவும் இப்போது ஜான்வி கபூர் பாலிவுட் நடிகர் ஷிகர் பஹாரியாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் அது இப்போது உண்மையாகும் விதத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் ஜோடியாக செல்லும் புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. பொதுவாக பாலிவுட் பிரபலங்கள் டேட்டிங் செய்வதும், அதன் பிறகு கழட்டி விடுவதும் சர்வ சாதாரணமாக இருக்கும்.

காதலனுடன் டேட்டிங் செய்த ஜான்வி கபூர்

janvikapoor-cinemapettai
janvikapoor-cinemapettai

Also Read: மகள் செயலால் மனமுடைந்த ஸ்ரீதேவி.. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லையாம்!

இந்த காதல் ஜோடி கடைசியில் திருமணம் செய்து கொள்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் ஜான்வி கபூர் தற்போது வளர்ந்து வரும் நடிகையாகவும் பல முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறார்.

அதற்கேற்றார்போல் ஜான்வி கபூர் தமிழில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமைக்கான குட் லக் ஜெர்ரி படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருடைய கைவசம் மில்லர், பால்வா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி போன்ற படங்கள் உள்ளன.

அம்மா காட்டாத கவர்ச்சியை மகள் ஜான்வி கபூர்

janvi-kapoor-cinemapettai
janvi-kapoor-cinemapettai

Also Read: முத்தத்திற்காக ஏங்கும் ஸ்ரீதேவியின் மகள்.. கவர்ச்சியில் மூழ்கடிக்க புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு