சென்னை: விஜய்யின் புலி படத்தை ஏற்றுக் கொண்டு பாகுபலி படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ஸ்ரீதேவி.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் ரூ. 1200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. பாகுபலி 2 படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பாகுபலி 2 பல சாதனைகளை படைத்து வருகிறது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியிடம் தான் கேட்டுள்ளார் ராஜமவுலி. ஆனால் ஸ்ரீதேவி ரூ. 6 கோடி சம்பளம் கேட்டதால் ராஜமவுலி யோசித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விஜய் முதல் முறையாக பேசும் பாஷை- விஜய் 60 வது படத்தின் புதிய தகவல்
புலி

புலி

ஸ்ரீதேவி பாகுபலியை விட விஜய்யின் புலி படத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடித்துள்ளார். பாவம் புலி படம் ஓடாததால் அவரின் கனவு பொய்த்துவிட்டது.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

ஸ்ரீதேவி நடிக்க மறுத்த பிறகே ராஜமவுலி ரம்யா கிருஷ்ணனிடம் பேசியுள்ளார். ரம்யா ரூ. 2.5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு சிவகாமியாக நடித்து அசத்தியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ரஜினிகாந்த் நடிப்பில் 21 வருடங்களுக்கு மேலாக வெற்றிநடைபோட்டு கொண்டீர்ருக்கும் "பாட்ஷா"
சிவகாமி

சிவகாமி

சிவகாமி சாதாரண பெண் இல்லை. அவர் குணத்தில் நல்லது, கெட்டது இரண்டும் உண்டு. இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. அதனால் உடனே ஒத்துக் கொண்டேன் என்கிறார் ரம்யா கிருஷ்ணன்.