பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

1963ல் தமிழ்நாட்டில் (சிவகாசி) பிறந்தவர் ஸ்ரீதேவி. இவர், 1967ல்  துணைவன்  என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின்னர் கந்தன் கருணை, எம்ஜிஆருடன் , நம்நாடு, சிவாஜிகணேசனுடன் ;வசந்தமாளிகை; போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். நன்கு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்து விட்டார்.

Sri Devi

16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், குரு,வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை,தர்மயுத்தம், ஜானி, ராணுவ வீரன், அடுத்த வாரிசு, தனிக்காட்டு ராஜா, நான் அடிமை இல்லை போன்றவை இவரின் சூப்பர் ஹிட் படங்கள் .

Sri Devi

நீண்ட இடைவெளிக்குப் பிறகு `இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திலும்.
நேரடி தமிழ் படமாக விஜய்யின் `புலி படத்திலும் நடித்தார். ஸ்ரீதேவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாம். ( 300ஆவது படம்)

ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மூன்று மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றுள்ளார் . கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், 6 முறை ஃபிலிம்ஃபேர் விருதினையும் வென்றுள்ளார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

SriDevi_Puli

ஸ்ரீதேவி 1996ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய மகள்கள் உள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது அழகாலும் வசீகரத்தாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி நள்ளிரவில் காலமானார்.

Sridevi & Daughter Jhanavi Kapoor two days back photo from DUBAI

துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார். ராஸ் -அல்- கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியுள்ளார் . திடீரென  இந்திய நேரத்தில் இரவு ஒரு மணியளவில் மார்பில் வலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாரடைப்பால் அவர் உயிர் இழந்தாராம்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

Sri devi

அது என்னவோ இந்த துயர செய்தியை கேட்ட உடன் பின்னணியில் “கண்னே கலைமானே ” பாடல் தான் கேட்கிறது.