நடிகை ஸ்ரீதேவி 13 ஆகஸ்ட் மாதம் 1963 ஆண்டு பிறந்தார் 24 பிப்ரவரி மாதம் 2018 இறந்துவிட்டார் இவர் தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.

Sri Devi

கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு 1976. ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

sridevi1

தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றுள்ளார்.

sridevi

திருமணத்திற்கு பிறகு இவர் திரைத்துறையை விட்டு விலகியே இருந்தார் பின்பு சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்லீஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்ததார் திரைத்துறைக்கு.

SriDevi_Puli

கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.செயதேவி தனது குடும்பத்துடன் துபாயில் நடந்து திருமண நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள சென்றிருந்தார், அங்கே அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்ப்பட்டது, நேற்று இரவு 11.30 மணிக்கு அவர் உயிர் இறந்ததாக தெரிகிறது.sridevi

இந்தத் துக்க தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் கூடவே இருந்துள்ளார். 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார் இவரின் மரணம் திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பீடு ஆகும்.

இவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி வீடியோ மற்றும் புகைப்படம்

Sridevi & Daughter Jhanavi Kapoor two days back photo from DUBAI