Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.

ஸ்ரீ லீக்ஸ்

மீ டூவுக்கு முன் சுசி லீக்ஸ்க்கு இடையில் பிரபலமாக இருந்தவர் தான் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கில் திரையுலகில் பலர் மேல் குற்றம் சாட்டிய இவர், தமிழிலும் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றினார் என்று லிஸ்ட் அடுக்கினார். முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி, லாரன்ஸ் என்று அடுக்கிக்கொண்டே போனார்.

Sri-Reddy

Sri-Reddy

சிலர் வாய் திறக்கவில்லை, சிலர் பதில் கூறினர். அந்தவகையில் லாரன்ஸ் மாஸ்டர் பதில் சொன்னார். தான் எந்த தவறும் செய்யவில்லை, ஸ்ரீயை பார்த்து பரிதாபமே படுகிறேன் என்றும் இயக்குநராக நடிப்பும், நடனமும் என்னை திருப்திபடுத்தினால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பும் தருகிறேன் என்று
பேஸ் புக்கில் பதிவிட்டார் . ரெட்டியும் டான்ஸ் விடியோவை பதிலாக பதிவிட்டார்.

Raghava Lawrence

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனக்கு பட வாய்ப்பு கொடுத்திருப்பதாக ஸ்ரீ ரெட்டி பேஸ் புக்கில் பதிவிட்டுள்ளார் .

ஒரு நல்ல செய்தி . நான் லாரன்சை அவர் வீட்டில் சந்தித்தேன். என்னை நல்லபடியாக கவனித்தார். அவர் வீட்டில் நிறைய குழந்தைகளும் இருந்தார்கள், அவர்கள் ஹாப்பியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் எனக்காக பிராத்தனை செய்தார்கள். அவருக்கு நடித்து காட்டினேன், அடுத்த படத்தில் நல்ல ரோலில் வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்து முன் பணமும் கொடுத்தார்.

இந்த பணத்தை புயலால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகுளம் மக்களுக்கு கொடுக்கிறேன். கொண்டடடுவதற்கான நேரம் ’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top