Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகர்களை பற்றி கூறியது போல், காஜல்,நயன்தாரா, சமந்தா என முன்னணி நடிகைகளை பற்றி பகீர் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி.!

நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு சினிமாவை அதிர வைத்தார், அதனால் தெலுங்கு சினிமாவே ஸ்தம்பித்தது, பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எங்கு நம் குட்டு உடைந்துவிடுமோ என பயந்தார்கள், இந்த நிலையில் பரபரப்பின் உச்சமாக தினமும் ஏதாவது ஒரு விஷயத்தை போட்டு உடைத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் என பலரின் லீலைகளை வெளியிட்டு வருகிறார், இவர் முதலில் இயக்குனர் முருகதாஸ் லீலைகளை கூறினார் அதன் பிறகு ஸ்ரீகாந்த் மற்றும் சுந்தர் சி என பலரின் வண்டவலங்களை போட்டுடைத்தார் அதற்க்கு சுந்தர் சி சட்டரீதியாக சந்திப்பேன் என கூறியுள்ளார்.
ஸ்ரீ ரெட்டி இதுநாள் வரை தன்னிடம் தவறாக நடந்துகொண்ட நடிகர்களை பற்றி தான் கூறினார் ஆனால் முதல் முறையாக நடிகைகளை பற்றி பேசி வருகிறார், இவர் பேஸ்புக்கில் கூறியது பல ரசிகர்களையும் தமிழ் திரையுலகத்தை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது, நிறைய பேர் எனக்கு மட்டும் தான் இதுபோல் தவறான விஷயம் நடந்துள்ளதாக கூறுகிறார்கள் ஆனால் என்னுடையது மிகவும் சிறியது, நயன்தாரா,திரிஷா,காஜல் அகர்வால்,சமந்தா போன்ற நடிகைகளுக்கு நடந்தது வெளியே சொல்ல ஆரம்பித்தால் அதிகம் தெரியவரும் என கூறியுள்ளார்.
