Connect with us
Cinemapettai

Cinemapettai

sri-reddy-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகைகளை மயக்கி உல்லாசமாக இருக்க நடிகர்கள் இதைத்தான் செய்வார்கள்.. ரகசியத்தை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை என்றால் அது ஸ்ரீரெட்டி தான். தற்போது மீராமிதுன் என்ன செய்கிறாரோ அதை பல மாதங்களுக்கு முன்பே இவர் செய்துவிட்டார்.

சினிமா அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தியது, முன்னணி நடிகர்களை தாக்கி பேசியது, மேலும் பல நடிகர்கள் தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொண்டது என தன்னைத்தானே அசிங்கப் படுத்திக் கொண்டார்.

சமீபகாலமாக ஸ்ரீரெட்டி எந்த ஒரு விஷயத்தையும் பேசாமல் இருந்ததால் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொண்ட நடிகர்களை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார்.

இதுவரை தன்னைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த ஸ்ரீரெட்டி தற்போது பல நடிகைகளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை பற்றி பேசப் போவதாக சமீபத்தில் ஒரு ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார்.

அதில் நடிகர்கள் எப்படி நடிகைகளை நினைத்த மாதிரி அடைவார்கள் என்பதை ஓப்பனாக தெரிவித்துள்ளார். எந்த நடிகையின் மீது ஆசை இருக்கிறதோ அவர்களை தனியாக பார்ட்டிக்கு அழைப்பார்களாம்.

அங்கு அழைத்து அவர்களது குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து விட்டு விடுவார்களாம். பின்னர் அவர்களை தன்னுடைய உல்லாசத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை தெரிவித்துள்ளார்.

சினிமாவில் இப்படி எல்லாம் நடக்குமா என தற்போது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஸ்ரீரெட்டி ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.

Continue Reading
To Top