Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டியால் உஷாரான தமிழ் திரையுலகம்

தமிழ் திரையுலகில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டும் விதமாக பெண்களுக்கான தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சினிமா வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் தஙகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இது திரையுலகில் சாதாரணமாக நடக்கும் விஷயம் தான் என்றும், பல நடிகைகள் தங்களுக்கே இந்த மோசமான அனுபவம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள். ஒரு மொழி மட்டுமல்லாமல் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இதே பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

சமீபகாலமாக, தெலுங்கு திரையுலகில் துணை நடிகையாக இருக்கும் ஸ்ரீரெட்டி. சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டினார். இதற்காக, அவரின் நடிகர் சங்க அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இருந்தும், அவர் தான் சரியில்லை என தெலுங்கு திரையுலகமே அவருக்கு எதிராக திரும்பியது. இதையடுத்து, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடனான ஆபாச சாட்டின் ஸ்க்ரீன்சாட்கள், முக்கியமாக நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபதியுடனான அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார். இதனால், மொத்த சினிமா உலகமே ஆடித்தான் போனது. இவரை போல, கோலிவுட்டில் யாரும் கிளம்பி விடும் முன்னர் ஒரு முக்கிய முடிவை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சினிமாவில் பணியாற்றும் பெண்களுக்கும், நடிகைகளுக்கும் ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்காகத் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வைஷாலி சுப்பிரமணியம் தலைவராகவும், ஏஞ்சல் சாம்ராஜ் துணைத்தலைவராகவும் , வி.வி.ஈஸ்வரி பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கௌரவ ஆலோசகராக நடிகையும், இயக்குனருமான ரோகிணி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

திரைத்துறையில் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் பல துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இதனை தடுக்கவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top