fbpx
Connect with us

ஸ்ரீ ரெட்டியால் தெலுங்கு தொலைக்காட்சிகளுக்கு தயாரிப்பாளர்கள் வைத்த பெரிய ஆப்பு…

srireddy

News / செய்திகள்

ஸ்ரீ ரெட்டியால் தெலுங்கு தொலைக்காட்சிகளுக்கு தயாரிப்பாளர்கள் வைத்த பெரிய ஆப்பு…

சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டிக்கு சாதகமாக பேசிய தெலுங்கு செய்தி தொலைக்காட்சிகளுக்கு இனி எந்தவிதமான சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் தரப்போவது இல்லை என தெலுங்கு தயாரிப்பாளர் சங்க முடிவெடுத்து இருக்கிறது.

Sree Reddy

கோலிவுட்டையே ஒரு ஆட்டு ஆட்டி வைத்தது சுசிலீக்ஸ். பாடகி சுசீத்திராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியாகி கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதில், தமிழ் சினிமாவின் பிரபலங்களான த்ரிஷா, தனுஷ், ஆண்ட்ரியா, அனிருத், சஞ்சிதா ஷெட்டி, டிடி ஆகியோரின் ஆபாச வீடியோ, புகைப்படங்களை வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து, சுசித்ராவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. பின்னர், அவரும், அவர் கணவரும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் டுவிட்டர் கணக்கு தவறாக கையாளப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது ஓய்ந்து ஒரு வருடம் ஆகவில்லை மீண்டும் தலைத்தூக்கி விட்டது லீக்ஸ் பஞ்சாயத்து.

sri reddy

ஆனால், இந்த முறை சிக்கியது கோலிவுட் இல்லை தெலுங்கு திரையுலகம். துணை நடிகை ஸ்ரீரெட்டி ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பலர் முகத்தை தோல் உரித்தார். மேலும், மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் உறுப்பினருக்கான அடையாள அட்டையைக் கூட எனக்கு கொடுக்க மறுக்கின்றனர்’ என்று ஸ்ரீ ரெட்டி குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து, ஸ்ரீரெட்டி தன்னுடன் பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எடுத்து கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் ஆபாச உரையாடல்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கு திரையுலகையே கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமீபத்தில், நடிகர் பவன் கல்யாண் இப்பிரச்சனையை வேறு வழியில் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி அவரை அண்ணன் என அழைத்ததற்கு தான் வருத்தப்படுவதாக செருப்பால் அடித்துக்கொண்டார். தொடர்ந்து, பவன் கல்யாண் மற்றும் அவரின் தாய் பற்றி அவதூறாக பேசினார். இதற்கு பவன் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மன்னிப்பு கேட்டார் ஸ்ரீரெட்டி.

srireddy

srireddy

இந்நிலையில், அவரின் அந்த பேட்டியை வெளியிட்ட தெலுங்கு செய்தி சேனல்களுக்கு சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சியோ, விளம்பரமோ கொடுக்க போவது இல்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. செய்தி சேனல்களின் அதிகபட்ச வருமானமே திரைப்படங்களால் தான். தங்களிடமே பணம் வாங்கிக்கொண்டு, தங்களையே தவறாக பேசி இருப்பதை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார்? யார்? தெரியுமா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top