புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தளபதி-க்கு மட்டும் ‘நோ’.. அல்லு-க்கு ‘எஸ்’ ஆ.. கொதிக்கும் தளபதி ரசிகர்கள்

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் சமந்தா. இந்த படத்தில் குத்தாட்டம் போட முதலில் சமந்தா தயங்கி இருந்தாராம். அப்போது அல்லு அர்ஜுன் தான் அவரை ஊக்கப்படுத்தி ஆட வைத்தாராம்.

இந்த நிலையில் புஷ்பா 2-க்கும் சமந்தா தான் வேண்டும் என்று அடம் பிடித்தார்கள் ரசிகர்கள். ஆனால் அவர் ஆடப்போவதில்லை என்று சொல்லிவிட்டார்.இதையெல்லாம் வைத்து பாக்கும்போது நாகசைதன்யா பழிவாங்க தான் ஆடினாரோ என்ற சந்தேகம் வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, புஷ்பா 2 படத்தில் ஆடுவதற்கு முதலில் ஷ்ரத்தா கபூரை அணுகி, அவரும் ஆட ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் தற்போது ஆட முடியாது என்று மறுத்துவிட்டார்.

விஜய்-க்கு மட்டும் நோ வா?

இதை தொடர்ந்து, கங்குவா பட ஹீரோயின் திஷா பதானியை ஆட வைக்கப் போகிறார்களாம் என தகவல் வெளியானது. அவரும் நோ சொல்ல, ஸ்ரீ லீலாவிடம் சரணடைந்துள்ளார்கள் படக்குழுவினர். அவர் முதலில் மறுக்க, பின்பு ஓகே சொல்லியுள்ளார்.

சூப்பராக டான்ஸ் ஆடுவதற்கு பெயர் போன ஸ்ரீலீலா தான் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து குத்துப் பாடலுக்கு ஆடப் போகிறார் என கூறப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லையாம். இதை தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் வந்த மட்ட பாடலுக்கு டான்ஸ் ஆடுமாறு த்ரிஷா இல்லை மாறாக ஸ்ரீலீலாவிடம் தான் முதலில் கேட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. கோலிவுட்டில் இன்னும் ஹீரோயினாக அறிமுகமாகவில்லை. இந்த நேரத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடி அறிமுகமானால் நன்றாக இருக்காது என நோ சொல்லிவிட்டாராம் ஸ்ரீலீலா.

ஆனால் இதை தளபதி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போ இப்போ மட்டும் ஆடலாமா? தளபதி-க்கு நோ, அல்லு-க்கு மட்டும் எஸ் ஆ? என்று கேள்வி கேட்டு கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News