பிரபல நடிகர் மீது செக்ஸ் புகார்! பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீ லீக்ஸ் - Cinemapettai
Connect with us

Cinemapettai

பிரபல நடிகர் மீது செக்ஸ் புகார்! பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீ லீக்ஸ்

srireddy

News | செய்திகள்

பிரபல நடிகர் மீது செக்ஸ் புகார்! பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீ லீக்ஸ்

ஈ மற்றும் வெப்பம் படங்களில் நடித்த நானி மீது ஸ்ரீ ரெட்டி செக்ஸ் புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோலிவுட் பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. சுசி லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட்டே ஆடித்தான் போனது. கோலிவுட்டை தொடர்ந்து தற்போது தெலுங்கு உலகம் சிக்கி இருக்கிறது. நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் குறித்த அந்தரங்க தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பிரபலங்கள் பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார்.

தயாரிப்பாளர் வெங்கட அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருப்பதாக ஷாக் கொடுத்தார். பிரபல நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபதி தன்னை வலுகட்டாயமாக பாலியல் துன்புறுத்தியதாக தெரிவித்தார். தொடர்ந்து, அவர்களின் குளோஸான புகைப்படங்களும், அந்தரங்க சாட்களும் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஆனால், டகுபதி குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது. இதுமட்டுமல்லாமல், தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரின் பெயரும் சர்ச்சையில் சிக்கியது. பிரபல நடிகர் ராஜசேகருக்காக அவரது மனைவி ஜீவிதா இளம் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்புவதாகவும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். இது டோலிவுட்டை மட்டுமல்லாமல் கோலிவுட்டுக்கு ஷாக் கொடுத்தது.

இந்நிலையில் நடிகர் நானி ஒரு பெண்ணை கெடுத்து அவரது வாழ்வை சீரழித்து விட்டதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்து இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நானிக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். ராஜமௌலி இயக்கத்தில் சமந்தாவுடன் நான் ஈ, நித்யா மேனனுடன் வெப்பம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நானி என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top