fbpx
Connect with us

இலங்கை வெற்றி ஓவர்,இங்கிலாந்துடன் பிரமாண்ட கிரிக்கெட் டூர் ரெடி,எப்போ தெரியுமா..?

News | செய்திகள்

இலங்கை வெற்றி ஓவர்,இங்கிலாந்துடன் பிரமாண்ட கிரிக்கெட் டூர் ரெடி,எப்போ தெரியுமா..?

ஐந்து டெஸ்டுகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா எப்போது மோதும் என்கிற தேதியை வெளியிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

2014-ல் இந்திய அணி, இங்கிலாந்துடன் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதேபோல அடுத்த வருடமும் விளையாடவுள்ளது.2018-ல் இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுபயணம் செய்கிறது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 1 அன்று எட்பஸ்டனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஆனால் சுற்றுப்பயணம் டி20 போட்டிகளுடன் தொடங்குகிறது.ஜூலை 3 அன்று முதல் டி20 போட்டியுடன் இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம் தொடங்குகிறது. மூன்று டி20 போட்டிகள் முடிந்தபிறகு ஒருநாள் தொடர் ஜூலை 12 முதல் ஆரம்பமாகிறது.

இதன்பின்னர் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 11 அன்று 5-வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்து இந்தியச் சுற்றுப் பயணமும் முடிவடைகிறது.

இந்தியாவின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம்

டி20 தொடர்

ஜூலை 3 – முதல் டி20
ஜூலை 6 – இரண்டாவது டி20
ஜுலை 8 – மூன்றாவது டி20

ஒருநாள் தொடர்

ஜூலை 12 – முதல் ஒருநாள் போட்டி
ஜூலை 14 – இரண்டாவது ஒருநாள் போட்டி
ஜூலை 17 – மூன்றாவது ஒருநாள் போட்டி

டெஸ்ட் தொடர்

ஆகஸ்ட் 1 – முதல் டெஸ்ட்
ஆகஸ்ட் 9 – இரண்டாவது டெஸ்ட்
ஆகஸ்ட் 18 – மூன்றாவது டெஸ்ட்
ஆகஸ்ட் 30 – நான்காவது டெஸ்ட்
செப்டம்பர் 7 – ஐந்தாவது டெஸ்ட்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top