India | இந்தியா
இலங்கை குண்டு வெடிப்பிற்கு காரணம் இவர்கள்தான்.. வெளிவந்த தீவிரவாதிகளின் தகவல்கள்
இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் பெயர்கள் தற்போது கிடைத்துள்ளது.
Srilanka: இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் பெயர்கள் தற்போது கிடைத்துள்ளது. இதனை அந்த நாட்டு புலனாய்வு பிரிவில் இன்று வெளியிட்டுள்ளனர். இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்கள் உட்பட எட்டு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து அந்த நாடு தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதனடிப்படையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் விஜேவர்த்தன இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த கும்பல் காரணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒரு பெண்ணும் சேர்ந்து மொத்தம் ஒன்பது பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதோ அந்த தீவிரவாதிகளின் பெயர் 7 தீவிரவாதிகளின் பெயர்களை புலனாய்வு துறை இன்று வெளியிட்டது. அதில்
அபு உபெய்தா,
அபு அல் முக்தார்,
அபு முஹம்மத்,
அபு ஹம்ஸா,
அபு அப்துல்லா,
அபு கலீல்,
அபு அல் பாரா இவர்கள் தான் தாக்குதல் நடத்தியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தவர்கள் மட்டும் தான் அவர்களின் பெயர்கள் முன்னாடி அபு என சேர்த்துக் கொள்வார்கள் என கூறியுள்ளனர். மேலும் இதனை குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
