Connect with us

Cinemapettai

இலங்கை முத்தையா முரளிதரன் கருத்தால் மீண்டும் சர்ச்சை.. விடுதலைப் புலிகள்.. தகுதியற்ற தலைமையா?

India | இந்தியா

இலங்கை முத்தையா முரளிதரன் கருத்தால் மீண்டும் சர்ச்சை.. விடுதலைப் புலிகள்.. தகுதியற்ற தலைமையா?

சமீபத்திய பேட்டி ஒன்றில் முத்தையா முரளிதரன் புலிகள் ஒடுக்கப்பட்ட நாள் தான் எனது வாழ்வில் முக்கியமான நாள் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்திய வம்சாவளியான முத்தையா முரளிதரன் இலங்கையை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர். இவர் இலங்கை  கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளவர். இன்றுவரை இவரின் சாதனையை முறியடிக்க எந்த சுழற்பந்துவீச்சாளர் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இவரின் வித்தியாசமான ஸ்பின் பௌலிங் முறை இன்றும் இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகிறது. இந்நிலையில் முத்தையா முரளிதரனின் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நாள்தான் என் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று கூறியுள்ளார்.

மேலும் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழர்களின் சேர்க்கைக்கான பேச்சுவார்த்தையின் போது விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டது என் மனதில் ஆறாத வடுவாக உள்ளது. இப்போது சிறந்த அனுபவமிக்க ஒருவர்தான் நாட்டை ஆள வேண்டும். அது தான் திட்டமிடலும் அதற்கான சிந்தனையும் தெளிவாக இருக்கும், நான் அந்த மாதிரி மனிதருக்குத் தான் ஓட்டு போடுவேன் என்றும் வெளிப்படையாக கூறியிருந்தார்.

இவர் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் விஜய் சேதுபதி, முரளிதரனின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க  இருப்பதாக செய்திகள் வெளிவந்த போதும் இதேபோல் சர்ச்சையை ஒன்று உருவானதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top