Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதன்முறையாக வனிதாவை தோலுரித்த ஸ்ரீதேவி விஜயகுமார்.. புடவையும் புருஷனும் ஒன்னா உனக்கு?
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று டைட்டில் வின்னரான பிறகு, சூட்டோடு சூடாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
இந்த நிலையில் திடீரென தன்னுடைய யூடியூப் சேனலில் விஷுவல் எடிட்டராக பணிபுரிந்த பீட்டர் பால் என்பவரை, மூன்றாவது முறையாக கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் வனிதா.
மேலும் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வனிதா மூன்றாவதாக விவாகரத்து கூட ஆகாத பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டது சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறி, சர்ச்சையை கிளப்பியது.
சமீபத்தில் வனிதா தன்னுடைய யூடியூப் பக்கத்தில், எந்த நேரமும் மது அருந்தி கொண்டிருந்ததால் பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வனிதா பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்துகொண்ட மூன்று மாதத்திலேயே அவரை விட்டு பிரிந்தது குறித்து வனிதாவின் தங்கை ஸ்ரீதேவி கூறியதாக ஒரு தகவல் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.
அதாவது வனிதாவுக்கும் அவரது அப்பா மற்றும் உடன் பிறந்தவர்களுக்கும் இடையே சில ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் வனிதா அந்த குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு இருக்கிறார்.
இவ்வாறிருக்க, திடீரென வனிதாவை பற்றி அவரது தங்கையான ஸ்ரீதேவி விஜயகுமார் கருத்து தெரிவித்து உள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அந்த தகவலின் படி ஸ்ரீதேவி, ‘புடவையை மாற்றுவது போல புருஷனை மாற்றிக் கொண்டே இருக்கா. ரெண்டு பொண்ணுங்களுக்கு ஆவது வனிதா இனிமேல் நல்லா இருக்கணும்’ என்று கூறியிருப்பது போல் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே வனிதா குடும்பத்தினர் யாருமே அவரை அவ்வளவாக கண்டு கொள்ளாத நிலையில், ஸ்ரீதேவி இப்படி வனிதாவை பற்றி பேச வாய்ப்பே இருக்காது என்கின்றனர் நெட்டிசன்கள்.
மேலும் இந்த தகவல் உண்மையா பொய்யா என்று தெரியாத நிலையிலும் கூட, இத்தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

vanitha
