அதிரடி மாற்றம் புதிய கேப்டனை அறிவித்த சன் ரைசர்ஸ்- இனியாவது வெற்றி கிட்டுமா?

மிகவும் குறுகிய இடைவெளியில் நடந்த ஐபிஎல் சீசன் இதுவாக தான் இருக்கும். அரபு எமிரேக்கத்தில் சென்ற 2020 போட்டிகள் நடந்தன,  இந்த கொடூர கொரோனா சூழலிலும் திட்டமிட்டபடி 2021 இந்தியாவில் போட்டிகள் நடந்து வருகின்றது. ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண முடியாது, வீரர்கள் மற்றும் ஸ்டாப்களுக்கு பயோ பப்பில் வாழக்கை என கட்டுப்பாடுகள் அதிகம். மேலும் home -away என்றும் போட்டிகள் கிடையாது.

சென்னை, டெல்லி, மும்பை போன்ற டீம்கள் சிறப்பாக விளையாடி வர, இம்முறை பெங்களூரு அணியும் அதிரடி காட்டி வருகின்றது. எனினும் ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற டீம்கள் தடுமாறி வருகின்றனர். தற்பொழுது நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் டீமிடம் உள்ளனர், மாற்று வீரர்கள் இருவர் இன்னமும் டீமுடன் இணையவில்லை. இது இப்படி இருக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் டீம் 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளனர்.

ஐபிஎல் இல் அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கலக்கும் டீம் இவர்கள், ஆனால் இம்முறை அந்தோ பரிதாபம் என உள்ளனர். இந்நிலையில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்படுவார் என அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது.

“நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி மற்றும் இனி வரும் மீதமுள்ள போட்டிகள் அனைத்திற்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் பொறுப்பேற்பார்.

அணியின் நலனை கருத்தில் கொண்டு கேப்டனை மாற்ற அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் ராஜஸ்தான் போட்டியில் ஆடும் வெளிநாட்டு வீரர்களையும் மாற்றுவோம் .

கடந்த சில ஆண்டுகளாக டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும், அதன் உரிமையாளருக்கு சிறந்த பங்களிப்பை கொடுத்திருந்தார். மீதமுள்ள போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணி களமிறங்கும்போது களத்தில் வெற்றிபெறவும் களத்திற்கு வெளியே ஆலோசனை வழங்கவும் டேவிட் வார்னர் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்குவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press Release SRH

நடராஜன், புவனேஸ்வர் குமார் போன்றவர்களுக்கு காயம், மத்தியவரிசை இந்திய பேட்ஸ்மான்களின் தடுமாற்றம் என்பதே தோல்விகளுக்கு முக்கிய காரணம்.  எனினும் புதிய பரிமானத்துடன் செய்லபடுமா டீம் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் பட்சத்தில் வார்னர் மீண்டும் தனது பேட்டிங்கில் முழு கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.