வார்னரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 210 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் 37வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான வார்னர் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே கொல்கத்தாவின் பந்துவீச்சை நான்கு புறமும் பறக்கவிட்ட 43 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் ஐ.பி.எல் அரங்கில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார்.

மறுமுனையில் தன்பங்கிற்கு பொறுமையாக விளையாடிய தவான் 29 ரன்கள் எடுத்தபோது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய வார்னர் 126 ரன்கள் எடுத்திருந்தபோது வோக்ஸ் பந்தில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய வில்லியம்சன் 40 ரன்களும் யுவராஜ் சிங் 6 ரன்களும் எடுத்து கைகொடுக்க 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி  190 ரன்கள் எடுத்துள்ளது.