புனே: புனே அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ஐதராபாத் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் புனேவில் நடக்கும் 24வது லீக் போட்டியில், புனே, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் ’டாஸ்’ வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். புனே அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார். ஐதராபாத் அணியில் யுவராஜ் சிங் காயம் காரணமாக நீக்கப்பட்டு பிபுல் சர்மா அணியில் இடம் பிடித்தார்.

அதிகம் படித்தவை:  வலைப்பயிற்சியின் பொழுது குட்டி பையனுடன் "hi-fi" விளையாடும் தோனி ! வைரல் வீடியோ உள்ளே !

ஆமைவேக துவக்கம்:
இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு தவான் (30), வார்னர் (43) ஜோடி ஆமை வேகதுவக்கம் அளித்தது. இந்த ஜோடி பவர் பிளேவான முதல் ஆறு ஓவர்களில் மொத்தமாக 45 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கடைசி ஓவர் மல்லுக்கட்டு:
அடுத்துவந்த வில்லியம்சன் (21) ஓரளவு கைகொடுத்தார். இதன்பின் மந்தமாக ரன்கள் சேர்த்த ஐதராபாத் அணி, 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நேரத்தில் கூடா, ஹென்ரிக்ஸ், இழுத்துபிடித்து மல்லுக்கட்ட, ஐதாராபாத் அணியை 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹென்ரிக்ஸ் (55), கூடா (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

புனே அணி சார்பில் உனக்தத், கிறிஸ்டியன், தாகிர் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அதிகம் படித்தவை:  ‘தல’ தோனியை திரும்ப திரும்ப முதுகில் குத்தும் புனே அணி!

3வது இளம் வீரர்:
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், களமிறங்கிய சென்னையின் 17 வயதான வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் அரங்கில் இளம் வயதில் அறிமுகமாக மூன்றாவது வீரர் என்ற பெருமை பெறார்.