ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், புனே அணி, 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த 44வது லீக் போட்டியில், ஐதராபாத், புனே அணிகள் மோதுதின.
இதில் ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதில் ஐதராபாத் அணியில், நெஹ்ரா, பிபுல் சர்மா அணிக்கு திரும்பினர். புனே அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

திருப்பதி சொதப்பல்:
இதையடுத்து களமிறங்கிய புனே அணிக்கு, ரகானே, ஸ்மித் (34), ஸ்டோக்ஸ் (39) தோனி (31) ஆகியோர் கைகொடுக்க புனே அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது.

ஐதராபாத் அணி சார்பில் காவுல் அதிகபட்சமாக 4 விக்கெட் கைப்பற்றினார்.

தெறிக்கவிட்ட ஸ்டோக்ஸ்:
எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு, கேப்டன் வார்னர் (40), யுவராஜ் சிங் (47) , தவான் (19) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்ட வில்லை.

உனக்தத் ‘ஹாட்ரிக்’:
ஐதராபாத் அணி, வெற்றி பெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பிபுல் சர்மா (8) அவுட்டானார். அடுத்த பந்தில் ரசித் கான் (3) வெளியேறினார். ஹாட்ரிக் பாலை எதிர்கொண்ட புவனேஷ்வர் (0) சிக்ஸ் அடிக்க முயற்சித்து அவுட்டாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது ஹாட்ரிக்கை உனக்தத் பூர்த்தி செய்தார்.


தவிர, அடுத்த இரண்டு பந்தில் ஒருரன் கூட எடுக்கவில்லை. இதனால், கடைசி ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் ஹாட்ரிக் விக்கெட் உடன் ஸ்டைலாக புனே அணிக்கு உனக்தத் வெற்றி தேடித்தந்தார்.