பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஹைதராபாத் அணி 26  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் 33வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை  செய்தன.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான வார்னர் 51 ரன்களும், தவான் 77 ரன்களும் எடுத்து வலுவான துவக்கம் கொடுத்தனர்.

அதனையடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங் 15 ரன்களில் வெளியேறினாலும் அந்த அணியின் மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான கேன் வில்லியம்சன் இறுதி கட்டத்தில் 27 பந்துகளுக்கு 54 ரன்கள் எடுத்து கைகொடுக்க 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 207 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு சேன் மார்ஸ் 50 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கைகொடுத்தாலும் மற்றவீரர்களுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாததால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்  இழந்த பஞ்சாப் அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் 26  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.