கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஹைதராபாத் அணி  48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் 37வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் கேப்டன் வார்னர் 59 பந்துகளுக்கு 126 ரன்களும், வில்லியம்சன் 25 பந்துகளுக்கு 40 ரன்களும் எடுத்து கைகொடுக்க 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 209 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணி வீரர்கள் கடினமாக போராடிய போதிலும் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.