fbpx
Connect with us

Cinemapettai

போராடிய சின்ன பையன்கள்… கைகொடுக்காத சீனியர் வீரர்கள்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது டெல்லி !

போராடிய சின்ன பையன்கள்… கைகொடுக்காத சீனியர் வீரர்கள்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது டெல்லி !

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 15  ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்றைய லீக் போட்டியில் ஹைதராபாத் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன்  டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் வார்னர் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் – ஷிகர் தவான் கூட்டணி டெல்லியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்ததால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை  இழந்த ஹைதராபாத் அணி 191 ரன்கள் எடுத்து.

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 51 பந்துகளுக்கு 5 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், ஷிகர் தவான் 70 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் பில்லிங்க்ஸ் 13 ரன்களில் வெளியேறவே டெல்லி அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது.

அதனை தொடந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் 42 ரன்களும், கருண் நாயர் 33 ரன்களும் எடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த மேத்யூஸ் – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இறுதி வரை போராடியும் 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

மிகச்சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை கொண்ட கிறிஸ் மோரிஸை முன்னதாக களமிறக்காமல் அவருக்கு பதிலாக மேத்யூஸை களமிறங்கியதே டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top