Sports | விளையாட்டு
சி.எஸ்.கே அணியை கண்டாலே பிடிக்காது.. இதுதான் காரணம்.. சர்ச்சை வீரர் ஸ்ரீசாந்த்
நாக்கில் சனியை வைத்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர் என்றால் அது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் ஆவார். சர்ச்சைகளின் மறு உருவம் என்று கூறினால் அது மிகையாகாது. அவர் தற்போது சி.எஸ்.கே அணியை இதனால் தான் பிடிக்காது என்று கூறி மீண்டும் வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டிருக்கிறார்.
ஐ.பி.எல் சூதாட்ட புகார் காரணமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்து ஸ்ரீசாந்த், தற்போது தடை முடிந்து மீண்டும் இந்திய அணியில் விளையாட விரும்புவதாக அறிவித்துள்ளார். ஆனால் இது எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. தற்போது 36 வயதாகும் ஸ்ரீசாந்த் தடையில் இருந்த நாட்களில் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் சூதாட்ட புகார் காரணமாக அணியிலிருந்து ஒதுக்கப்பட்ட ஸ்ரீசாந்த் சமீபத்திய பேட்டியில், சி.எஸ்.கே அணியை இதனால்தான் பிடிக்காது என்று வினோதமான காரணத்தைக் கூறி சிஎஸ்கே ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

csk-team
அது என்னவென்றால், தனக்கு மஞ்சள் நிறம் பிடிக்காது எனவும், அதனாலேயே சி.எஸ்.கே அணியை மிகவும் வெறுப்பதாகவும் கூறினார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் ஜெர்ஸி மஞ்சள் நிறம் என்பதால் அந்த அணியை எனக்கு சுத்தமாக பிடிக்காமல் இருந்தது எனவும் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
