Entertainment | பொழுதுபோக்கு
நாச்சியார் படத்தில் ஜி வி பிரகாஷ் ரோலில் நடிக்க இருந்த முதல் சாய்ஸ் நடிகர் யார் தெரியுமா ?
தமிழ் சினிமாவில் ‘தாரை தப்பட்டை’ படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவான படம் நாச்சியார். இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் ரிலீசானத்தில் இருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூலிலும் கலக்கி வருகின்றது இப்படம்.
மிரட்டல் போலீஸ் அதிகாரியாக ஜோ ஒருபுறம் என்றால் அப்பாவி கர்பிணிப்பெண்ணாக இவனா மறுபுறம். இவர்களுக்கு சரிக்கு சமனாக ஜி வி பிரகாஷ் காதல், தனிமை, சோகம், ஏமாற்றம், காமெடி என அனைத்தையும் கலந்து அசத்தி விட்டார். இவ்வளவு நாள் இந்த நடிப்பை எங்கு ஒளித்து வைத்திருந்தார் ஜி. வி என அனைவரும் கேட்கும் படி செய்துவிட்டார்.
இந்நிலையில் காத்து என்ற அந்த கதாபாத்திரத்துக்கு இயக்குனர் பாலாவின் முதல் சாய்ஸ் நடிகர் ஸ்ரீ தானம்.

shree
அட ஆமாங்க நம் விஜய் டிவி சீரியலில் ஆரம்பித்து பின்னர் வழக்கு என், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் தொடர்ந்து பிக் பாஸ் வரை கலக்கிய ஸ்ரீராம் நடராஜனே தான்.
எனினும் என்ன காரணத்தால் ஸ்ரீ படத்தில் நடிக்கவில்லை என்பது தெளிவாக தெரியவில்லை.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
