fbpx
Connect with us

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் பார்த்துவிட்டு தமிழக டிஜிபி என்ன சொன்னார் தெரியுமா ? போட்டோ உள்ளே

News | செய்திகள்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் பார்த்துவிட்டு தமிழக டிஜிபி என்ன சொன்னார் தெரியுமா ? போட்டோ உள்ளே

சதுரங்க வேட்டை இயக்குனரின் அடுத்த படைப்பு  தீரன் அதிகாரம் ஒன்று. இத்திரைப்படம் நேற்று வெளியானது.ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படம், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

Karthi & H Vinoth

இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோ,  சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. போக்குவரத்து ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபியான எஸ்.ஆர்.ஜாங்கிட் கலந்துகொண்டு படத்தைப் பார்த்தார்.

Suriya SR Jangid Karthi

இப்படத்தை தன் சக பணியாளர்களுடன் பார்த்த சம்மந்தப்பட்ட போலிஸ் டி.ஜி.பி ஜாங்கிட் படக்குவினரை வாழ்த்தியுள்ளார். படம் முடிந்தபிறகு அவர் கூறியதாவது,

‘தீரன் அதிகாரம் ஒன்று படம் மிக அருமையாக வந்துள்ளது.. உண்மையில் அந்த பவ்ரியா குழுவை பிடிக்கும் மிஷனுக்கு நாங்கள்தான் தலைமை வகித்தோம். எப்படி அந்த சம்பவங்கள் போலீஸ் பார்வையில் நடந்ததோ அது அப்படியே படமாக வந்துள்ளது. நடிகர் கார்த்தியையும் இயக்குனர் வினோத்தையும் நான் ரொம்ப பாராட்ட வேண்டும். ஆரம்பம் முதல் எப்படி பவ்ரியா மிஷனை செயல்படுத்தினோம், எப்படி பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டில் சம்பவங்கள் செய்தார்கள், அவர்களை நாங்கள் எப்படி பிடித்தோம் என்பதை அப்படியே படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேரை நாங்கள் என்கவுண்டர் செய்தோம், பதிமூன்று பேரை உயிரோடு பிடித்தோம். அதே போன்று உயர்நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை சரியான முறையில் சேர்த்து செய்துள்ளார்கள்.

இந்த படத்தில் காண்டப்ப்டும் அனைத்தும் உண்மை. ரொம்ப கஷ்டப்பட்டு பவ்ரியாவுக்கு சென்று நடித்துள்ளார்கள். கமாண்டோ பயிற்சி எவ்வளவு அளித்திருப்பார்கள் என்று நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. குதிரை சவாரி, கமாண்டோ காட்சிகளை பார்க்கையில் சமீபத்தில் வந்த ‘சோலோ’ படம் போல் அருமையாக இருந்தது. படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அருமையான தயாரிப்பு. எல்லா காவல் துறையினருக்கும் இப்படம் பிடிக்கும்’’ என்று கூறியுள்ளார்.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்

தீரன் அதிகாரம் ஒன்று- மூவி ரீவியூ

இது தான் ஜி ரியல் வெற்றி என்பது. வாழ்த்துக்கள் ஹீரோ கார்த்தி, இயக்குனர் வினோத். அதிகாரம் இரண்டு பற்றிய அறிவிப்பு எதுவும் வருமா ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top