Squid Game season 2 : ஸ்க்விட் கேம் சீசன் 2 டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. இந்த தொடரின் முதல் சீசன் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதில் தென்கொரியாவில் தெருக்களில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட 456 வீரர்கள் ஒரு விளையாட்டுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மிகவும் ஆபத்தான விளையாட்டான இது சுற்றுகள் கடினமாகும் போது அந்த குழந்தைகள் உணர்கிறார்கள். இதற்கான இறுதிப் போட்டியில் உயிர் பிழைத்தவர்கள் மட்டுமே வெற்றியை சூடுகிறார்கள். இந்தத் தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றவுடன் இப்போது சீசன் 2 டிசம்பர் 26 வெளியாக உள்ளது.
இதன் காரணமாக இப்போது நெட்பிளிக்ஸ் ஸ்க்விட் கேமி சீசன் 2 டீசரை வெளியிட்டு இருக்கிறது. விற்பனையாளராக இருக்கும் காங் யூ தன்னுடைய காலை நேரத்தில் எழுந்து மூன்று மணியில் தொடங்கி தனது அன்றாட வேலைக்காக தயாராகிறார்.
அதிலிருந்த ஒரு சுரங்கை பாதைக்குள் நுழைந்து சிவப்பு மற்றும் நீல நிற உரை ஆகிய விளையாட்டிற்குள் வீரர்களை ஈர்க்க பார்க்கிறார். இந்தக் கொடிய விளையாட்டிற்குள் வந்து எவ்வாறு அதிலிருந்து சிலர் மட்டும் மீளுகிறார்கள் என்பதுதான் இந்த சீசனிலும் வர இருக்கிறது.
கடந்த சீசனில் காங் யூ கதாபாத்திரம் மிகக் குறைந்த காட்சிகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஸ்க்விட் கேம் சீசன் 2 வில் அதிக காட்சிகள் இடம்பெற உள்ளார் என்பதை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெளிவுபடுத்தி உள்ளது.
மேலும் இந்த டீசர் மூலம் இந்தத் தொடரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். பெரும்பாலும் பள்ளி படிக்கும் குழந்தைகள்தான் இந்த தொடருக்காக அதிகம் காத்திருக்கின்றனர்.