ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபு நடித்திருக்கிறார் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுமான 5 பாய்ஸ்களில் ஒருவர் பரத். ஷங்கர் தயாரித்த காதல் படத்தின் மூலம் புகழ்பெற்றார். செல்லமே, பிப்ரவரி 14, பட்டியல், என் மகன், வெயில் படங்களில் நடித்த அவர் திடீரென சின்ன தளபதி பட்டத்துடன் பழனி, சேவல் போன்ற படங்களில் ஆக்ஷ்ன் அவதாரம் எடுத்தார்.

அதுவரை இயல்பான கேரக்டரில் நடித்து வந்தவர் திடீரென ஆக்ஷ்ன் ஹீரோவானதை மக்கள் ஏற்கவில்லை. கண்டேன் காதலை படம் மட்டும் ஆறுதல் வெற்றியை கொடுத்தது. சமீபகாலமாக பரத் ஹீரோ என்று இல்லாமல் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடுகு படத்தில் அப்படியான கேரக்டரில் நடித்தார்.spyder teaser

தற்போது அவர் பொட்டு, கடைசி பென்ஞ் கார்த்தி படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் எந்த ஆர்ப்பட்டமும் இல்லாமல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள ஸ்பைடர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவர் வில்லனாக நடித்திருக்கிறார்.

மெயின் வில்லன் எஸ்.ஜே.சூர்யா திட்டமிடுவதை செய்து முடிக்கும் அடுத்த வில்லனாக நடித்திருக்கிறார். செல்லமே படத்திற்கு பிறகு பரத் எதிர்மறை கேரக்டரில் நடிக்கும் படம். இந்தப் படத்திற்கு பிறகு தனது சினிமா பயணத்தில் சில மாறுதல்களை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.படத்தின் வெற்றியை பொறுத்து அது எந்த மாதிரியான மாற்றம் என்பது அமையும்.